Advertisment

ஜெயம் ரவி படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை

Anupama Parameswaran is joined in the cast of jayam ravi siren movie

ஜெயம் ரவி தற்போது அகமது இயக்கும் ஒரு படத்திலும், ராஜேஷ் இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே தனது 31-வது படமாக 'சைரன்' படத்தில் நடிக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அந்தோணி பாக்யராஜ் இயக்குகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். அண்மையில் இப்படத்தின் அறிவிப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது.

Advertisment

இந்நிலையில் 'சைரன்' படத்தில் இணைந்திருக்கும் மற்றோரு பிரபலத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மலையாளம் மற்றும் தெலுங்கில் பிரபலமாக வளம் வரும் அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் இதற்கு முன்னாள் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'கொடி' மற்றும் அதர்வா நடிப்பில் வெளியான 'தள்ளிபோகாதே' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இதனிடையே ஜெயம் ரவி பொன்னியின் செல்வன்', ஜன கன மன, அகிலன் உள்ளிட்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் வருகிற 30-ஆம் தேதியும் அகிலன் வருகிற 15-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

anupama parameshwaran jayam ravi Siren movie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe