Advertisment

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தில் இரண்டு கதாநாயகிகள்

anupama parameshwaran dharshana rajendran in mari selvaraj dhruv vikram movie

Advertisment

விக்ரமின் மகனான துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' படம்மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில் விக்ரமுடன் இணைந்து 'மகான்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா. ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமானார். 2021 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியான நிலையில் மாரி செல்வராஜ் மாமன்னன், வாழை என அடுத்தடுத்தபடங்களில் பணியாற்றியதால் படப்பிடிப்பு தாமதமானது. மாமன்னன் வெளியானதை தொடர்ந்து வாழை பட பணிகளும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் கதை, அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர்மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

anupama parameshwaran dharshana rajendran in mari selvaraj dhruv vikram movie

Advertisment

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில், மலையாள கதாநாயகிகள் அனுபமா பரமேஷ்வரன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகிய இருவரும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 80 நாட்கள் ஒரே மூச்சில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனுபமா பரமேஷ்வரன் கடைசியாகத்தமிழில் ஜெயம் ரவியின் சைரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தர்ஷனா ராஜேந்திரன் 2018 ஆம் ஆண்டு வெளியான விஷாலின் இரும்புத் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

mollywood anupama parameshwaran dhruv vikram mari selvaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe