Skip to main content

'இது திட்டமிட்டு பரப்பிய வதந்தி' - அனுபமா பரமேஸ்வரன் 

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
anupama parameshwaran

 

 

 

மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் பின்னர் தனுஷின் கொடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் இவர் 'ஹலோ குரு பிரேமகோசம்' என்ற படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மகளாக நடிக்கும் சமயத்தில் படப்பிடிப்பின் போது, அனுபமா பிரகாஷ் ராஜுடன் தகராறு செய்ததாகவும், அதனால் இருவரையும் செட்டில் இருந்து இயக்குனர் வெளியேற்றியதாகவும் செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இதை அனுபமா மறுத்து பேசியபோது.... "அவர் எனக்கு தந்தை போன்றவர். அவருடன் நான் வாக்குவாதம் செய்தேன் என்று சொல்வது சிரிப்பாக உள்ளது. யாரோ திட்டமிட்டு பரப்பிய வதந்தி இது" என்று விளக்கம் அளித்தார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

பும்ரா-அனுபாமா திருமணம்? - தாயார்  விளக்கம்!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

anupama bumrah

 

இந்திய வேகப்பந்து வீச்சளார் பும்ராவும், 'ப்ரேமம்' படம் மூலம் பிரபலமடைந்த நடிகை அனுபாமா பரமேஸ்வரனும் காதலிப்பதாக, சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் ஃபாலோ செய்ததும், ஒருவர் புகைப்படங்களை ஒருவர் லைக் செய்ததும் இதற்குக் காரணமாகும்.

 

கடந்த வருடம் நடிகை அனுபாமா, இந்தப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பும்ராவும் நானும் நண்பர்கள் மட்டுமே எனத் தெரிவித்தார். இந்தநிலையில் பும்ரா, நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அவர், திருமணத்திற்காக விலகியதாக தற்போது தகவல் வெளியாகிவுள்ளது. இந்தநிலையில் அனுபாமா, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிற்குச் செல்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். குஜராத் பும்ராவின் சொந்த மாநிலமாகும். இதனால் பும்ராவிற்கும், அனுபமாவிற்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக மீண்டும் செய்திகள் பரவின.

 

இந்தநிலையில், அனுபாமாவின் தாயார், இந்தச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மலையாள நாளிதழுக்குப் பேட்டியளித்த அனுபாமாவின் தாயார், "அனுபாமாவைப் பற்றி எல்லோரும் மறக்கத் தொடங்கும்போது ஒரு புதிய கதை தோன்றும். நாங்கள் நேர்மறையாகவே அதனைப் பார்க்கிறோம். இதற்கு முன்பும் அனுபாமா மற்றும் பும்ராவை இணைத்துப் பல கதைகள் வெளிவந்தன. இவை இன்ஸ்டாகிராமில், அவர்கள் ஒருவருக்கொருவர் பின்தொடர்வதை விரும்பாதவர்களால் உருவாக்கப்பட்டவை என்று நினைக்கிறேன். இதுபோன்ற, பொய்யான கதைகள் பரவியபின் அவர்கள் ஒருவரையொருவர் ஃபாலோ செய்யவில்லை என நினைக்கிறேன். ஒருமுறை அனுபாமா படப்பிடிப்பிற்குச் சென்ற அதே ஹோட்டலில் பும்ரா தங்கியிருந்தார். அப்போதுதான், ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள். இதுபோன்ற கதை, இப்போது ஏன் வெளிவந்தது என்று எனக்குப் புரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே பும்ரா யாரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் கிரிக்கெட் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.