பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனுக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் ஏராளம். மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவர்.

Advertisment

anupama parameshwaran

இந்நிலையில் நடிகை அனுபமாவும், இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவும் காதலிக்கின்றனர் என்று சமூக வலைதளத்தில் பரவலாக தகவல் 2019 உலகக்கோப்பை தொடர் தொடங்கும் முன்பில் இருந்தே பரவி வருகிறது. அதற்கு காரணம் என்ன என்றால் பும்ரா பின் தொடரும் ஒரு சிலரில் அனுப்பமா மட்டுமே நடிகை வேறு எந்த நடிகையும் அவர் பின் தொடரவில்லை. அதேபோல அனுபமா, பும்ரா பதிவிடும் அனைத்து பதிவுகளையும் லைக் செய்து, சில்வற்றை ரீட்வீட்டும் செய்கிறார். இதுபோன்ற விஷயங்களை வைத்து இருவரும் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக காதலித்து வருகின்றனர் என்று தகவல் பரவி வந்தது.

ஞாயிற்றுக்கிழமை அனுபமா ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். திங்கட்கிழமை பும்ரா ட்விட்டரில் பதிவு ஒன்றை போட, இவ்விரண்டை வைத்தும் சமூக வலைதளத்தில் இருவரும் காதலிப்பது போன்ற மீம்ஸ்கள் போட தொடங்கிவிட்டனர்.

Advertisment

இந்நிலையில் நடிகை அனுபமா இதுகுறித்து ஒரு பேட்டியில், நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை. இருவரும் நல்ல நண்பர்களே. காதல் என்று வரும் செய்திகள் அனைத்தும் புரளிகள் மட்டுமே என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இது போன்ற கிசுகிசுக்கள் சகஜம் தான் என்றும் அனுபமா குறிப்பிட்டுள்ளார்.