Advertisment

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மிஸ் இந்தியா அழகி!

Anukreethy Vas

Advertisment

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமாகிய பொன்ராம், தற்போதுவிஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். விஜய் சேதுபதியின் 46வது படமாக உருவாகவுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி. இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு இன்று (28.09.2021) வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார். இவர், கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

vijaysethupathi
இதையும் படியுங்கள்
Subscribe