anti indian

ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ஆன்டி இண்டியன். இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்துவிட்ட நிலையிலும், படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர தணிக்கை துறையினர் மறுத்ததால் இப்படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது. இதை எதிர்த்துப் படக்குழு நடத்திய சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து, தற்போது படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Advertisment

இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை(8.10.2021) மாலை 6 மணிக்கு தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனலில் ஆன்டி இண்டியன் ட்ரைலர் வெளியாகவுள்ளது.

Advertisment

கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட இப்படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூப் தளத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.