ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ஆன்டி இண்டியன். இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்துவிட்ட நிலையிலும், படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர தணிக்கை துறையினர் மறுத்ததால் இப்படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது. இதை எதிர்த்துப் படக்குழு நடத்திய சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து, தற்போது படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ப்ளூ சட்டை மாறனின் தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனலில் இந்த ட்ரைலர் வெளியாகியுள்ளது.