anti indian

Advertisment

பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், ‘ஆன்டி இண்டியன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் என அனைத்துப் பணிகளையும் ப்ளூ சட்டை மாறனே கவனித்துக்கொள்ள, மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பவா தயாரித்துள்ளார். படத்தின் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்த படக்குழு, தணிக்கைச் சான்றிதழ் பெற படத்தை தணிக்கைத் துறைக்கு அனுப்பிவைத்தது. ‘ஆன்டி இண்டியன்’ படத்தைப் பார்த்த தணிக்கைத் துறையினர், படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர். தற்போது தணிக்கைச் சான்றிதழ் கோரி படக்குழு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த நிலையில், ‘ஆன்டி இண்டியன்’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று (14.05.2021) வெளியாகியுள்ளது. ரம்ஜான் தினத்தை முன்னிட்டு மோஷன் போஸ்டரை தன்னுடைய யூ-டியூப் சேனலிலேயே மாறன் வெளியிட்டுள்ளார். வித்தியாசமான வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் கவனம் பெற்றுவருகிறது.