Another Player of the Vennila Kabadi Kuzhu passed away

Advertisment

இயக்குநர் சுசீந்திரனின் முதல் படமான வெண்ணிலா கபடிகுழுரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற வெற்றிப்படமாகும். இந்தப் படத்தில்தான் விஷ்ணு விஷால் நடிகராக அறிமுகமாகி இருந்தார். கபடியைப்பற்றிய படம் என்பதால் கபடி வீரர்களாக நடித்த அனைத்து நடிகர்களுமே ரசிகர்களால் பெரிதும் கவனம் பெற்றனர்.

இதில் நடித்த "மாயி சுந்தர்"என்ற நடிகர் இன்று அதிகாலை காலமானர். இவருக்கு வயது 50. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

 Another Player of the Vennila Kabadi Kuzhu passed away

Advertisment

இவர் மாயி படத்தில் அறிமுகமானதால் ‘மாயி சுந்தர்’ என்று சினிமா வட்டாரத்தில் அழைக்கப்பட்டார்.துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், மிளகா, கட்டா குஸ்தி என 50-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். வெண்ணிலா கபடி குழுவின் நடிகர்களில் ஒருவரான ஹரி வைரவன் டிசம்பர் 3 ஆம் தேதி காலமானார் என்பதுகுறிப்பிடத்தக்கது.