/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maxresdefault_5.jpg)
வீரம், வேதாளம், விவேகம், ஆகிய படங்களின் வெற்றி கூட்டணியான அஜித், சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15ஆம் தேதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சமீபத்தில் காமெடி நடிகர் யோகிபாபு , தம்பி ராமையா ஆகியோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், தற்போது இன்னொரு புதிய வரவாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி நடிகர் ரோபோ சங்கரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ரோபோ ஷங்கர் இணையும் பட்சத்தில் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)