/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/201807192204407422_1_thambi-2._L_styvpf.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அஜித் - சிவா கூட்டணியில் உருவாகும் 'விஸ்வாசம்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது அடுத்த கட்டப் படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அஜித் வயதான தோற்றம், இளமையான தோற்றம் என இரு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அஜித்துடன் சேர்ந்து தம்பி ராமையாவும் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் விவேக், யோகிபாபு, தம்பி ராமையா ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)