Annulment of Engagement; Modeling entry.. Top Heroine... Rashmika Mandhana 

Advertisment

ராஷ்மிகா மந்தனா வெளியிடுகிற ஃபோட்டோ ஷூட் படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் வருபவை.இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான ரசிகர்களால் பின்பற்றப்படுகிறவர். அவர் செய்கிற சுட்டித்தனத்தாலும், அவர் கொடுக்கும் எக்ஸ்ப்ரெஷன்களாலும் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டே இருப்பவர்.

ஒருபக்கம் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், இன்னொரு புறம் கலாய்க்கப்படாமலும் இல்லை. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வெவ்வேறு காமெடி காட்சிகளோடு ஒத்துப்போகும் ராஷ்மிகாவின் படங்களையும் சேர்த்து பரப்பி விடுகின்றனர். இது ராஷ்மிகாவின் கண்களில் பட, அதை அப்படியே தன் ட்விட்டரில் பகிர்ந்த ராஷ்மிகா "வடிவேலு சார் எவ்வளவு க்யூட்டாக இருக்கிறார்...”என்று சொல்லிரசிக்கவும் வைத்தவர்.

எல்லாவிதமான கதைகளோடும், கதாபாத்திரங்களோடும் தன்னை சோதித்துப் பார்க்க விரும்புவதாகக் கூறும் ராஷ்மிகா, ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் வைக்க வேண்டும் என்ற தனது நோக்கத்தையும், “இது உனக்கு சூட் ஆகும் ராஷ்... புகுந்து விளையாடு”என்று சொல்லும் தனது உள்ளுணர்வையுமே நம்புவதாக சொல்லி இருக்கிறார்.

Advertisment

கர்நாடக மாநிலம் விராஜ்பேட் பகுதியில்ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ராஷ்மிகா மந்தனா. கல்லூரிக் காலம்வரை ராஷ்மிகாவுக்கு சினிமா ஆசையே இருந்ததில்லையாம். அவர் அழகைப் பார்த்து சிலர் மாடலிங் செய்யச் சொல்ல அவரும் 'போய்த்தான் பார்ப்போமே' என்ற ஆசையில் செய்து பார்த்திருக்கிறார்.

இதில் ஓரளவுக்கு அடையாளம் கிடைக்க, 2012-ல் 'இந்தியாவின் புத்துணர்ச்சியான முகம்' என்ற பட்டம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அப்போது இதழியல், இலக்கியம் என்று படிப்பைத் தொடர்ந்துகொண்டிருந்த ராஷ்மிகாவிடம் ‘கிரிக் பார்ட்டி’என்ற படத்தின் குழுவினர் அப்ரோச் செய்ய, ரக்சித் ஷெட்டிக்கு ஜோடிபோட்டு அங்குதான் தொடங்கியிருக்கிறது ராஷ்மிகாவின் சினிமா ஆட்டம்.

Annulment of Engagement; Modeling entry.. Top Heroine... Rashmika Mandhana 

Advertisment

அறிமுக ஹீரோவோடு ஜோடி போட்டாலும், ராஷ்மிகாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்த படமே கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரோடு கமிட்டானார். அதுவும் ஹிட். அப்படியே தெலுங்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட்டு, மீண்டும் கன்னட சினிமாவில் என்ட்ரி கொடுத்து, ‘யஜமானா’படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியையும் ருசி பார்த்தார் ராஷ்மி. இந்த வெற்றி, மற்ற மொழிப் படங்களிலும் கவனம் செலுத்த வைத்திருக்கிறது அவரை.

தெலுங்கு சினிமாவில் ‘வெங்கி குடுமுலா’என்ற இயக்குநரின் ‘சலோ’படத்தில், நாக சௌரியாவுக்கு ஜோடி ஆனார். அந்தப் படமும், அதற்கு அடுத்து வந்த படமான ‘கீதா கோவிந்தமும்’ யாருடா இந்தப் பொண்ணு என்று திரும்பிப் பார்க்க வைத்தது. அதுவும், ‘இன்கெம் காவாலே’ பாட்டில் சேலை மடிப்பை அப்பாவியாக சரிசெய்து, தமிழ் ரசிகர்களையும் அட்ராக்ட் செய்தார். அதுவேகார்த்தியின் ‘சுல்தான்’படத்தின் மூலம் ராஷ்மிகாவுக்கு தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கிறது.

26 வயதாகும் ராஷ்மிகா மந்தனா சினிமாவுக்குள் வந்து ஆறு ஆண்டுகள்தான் ஆகின்றன.குறைந்த படங்களில்தான் நடித்திருக்கிறார்.ஆனால்... ராஷ்மிகா குவித்து வைத்திருக்கும் சொத்துகளைப் பார்த்தால் எவ்வளவு தான்மா சம்பளம் வாங்குன என கேட்க வைக்கிறார். கர்நாடக மாநிலத்தில் காபி தோட்டத்திற்கு பேர் பெற்ற குடகுமலையில் 24 ஏக்கரில் காபி எஸ்டேட், விராஜ்பேட்டையில் ஷெரினிட்டி என்ற பெயரில் 2 மாடிகள் கொண்ட பெரிய பங்களா, 2 பெட்ரோல் பங்க், 5 ஸ்டார் அந்தஸ்தில் பிரமாண்ட கல்யாண மண்டபம், இன்டர்நேஷனல் ஸ்கூல் என வகை தொகையில்லாமல் சொத்துகளை வைத்துள்ளாராம்ராஷ்மிகா.

எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகளின் மதிப்பு இருக்கும். "இந்த வயசுல இப்படி வளர்ச்சியா”என வாய் பிளந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ராஷ்மிகாவின் வீடு, பெட்ரோல் பங்குகள், கல்யாண மண்டபம், ஸ்கூல் ஆகியவற்றிலெல்லாம் அதிரடி ரெய்டு நடத்தி, கணக்கில் காட்டாத பணத்தைக் கைப்பற்றினார்கள் என்பது தனிக்கதை.

Annulment of Engagement; Modeling entry.. Top Heroine... Rashmika Mandhana 

கன்னட சினிமாவில் பெரிய பணக்கார ஹீரோவாக இருக்கும் ரக்‌ஷித் ஷெட்டி, முன்னணி தயாரிப்பாளரும் கூட. ‘கிரிக் பார்ட்டி’என்ற கன்னட படத்தின் மூலம் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. சினிமாவிற்குள் வந்து ஒரே வருடத்தில், அதாவது 2017 ஜூலை 3-ஆம் தேதி ரக்‌ஷித் ஷெட்டிக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.ஆனால், ஒரே வருடத்தில்அதாவது 2018 செப்டம்பர் மாதமே நிச்சயதார்த்தம் ரத்தானது. திருமணம் நடைபெறவில்லை.

அதன்பின், தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய்தேவரகொண்டாவுடன் ‘கீதா கோவிந்தம்’படத்தில் அறிமுகமான ராஷ்மிகா, ‘டியர் காம்ரேட்’படத்திலும் ஜோடி போட்டார். விஜய் தேவரகொண்டா உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. தமிழில் கார்த்தி உடன் சுல்தான்,அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா என்று ரவுண்டு கட்டி அடித்த ராஷ்மிகா தமிழின் முன்னணி ஹீரோவான விஜய் உடன் வாரிசு படத்தில் நடித்திருந்தார்.

இன்னும் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.தெலுங்கிலும் ஹிந்தியிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிற ராஷ்மிகா பெரிய ரவுண்டுக்கு தயாராகி வருகிறார்.