Announcement of the release date of the long overdue Sibiraj film

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் சிபிராஜ். கிஷோர் இயக்கத்தில் 'மாயோன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்திய அளவில் முதல் முறையாகப் பார்வைத்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகள் படத்தை உணரும் வகையில் ஆடியோ விளக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதனிடையே வினோத்.டிஎல். இயக்கத்தில் நடித்திருக்கும் படம் 'ரங்கா'. 'பாஸ் மூவிஸ்' தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நிக்கிலா விமல் நடிக்க ராம்ஜீவன் இசையமைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் 'ரங்கா' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி மே மாதம் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதனை சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டே இப்படம் திரையரங்கில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இரண்டு வருடத்திற்கு முன்பே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment