Announcement of the release date film starring Darshan and Laslia

Advertisment

‘பிக்பாஸ்’ பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூகுள் குட்டப்பா’. இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, பூவையார், மனோபாலா, ‘பிளாக்’ பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் ஆகிய இருவரும் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மே மாதம் 6-ஆம் தேதி ‘கூகுள் குட்டப்பா’ படம் திரையரங்கில் வெளியாகும் என தெரிவித்து ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். இப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.