/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1860.jpg)
இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் 'கூழாங்கல்' என்ற படத்தை தயாரித்திருந்தனர். அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்குயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். முதலில் வேறு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுவந்த ‘கூழாங்கல்’ திரைப்படம் பிறகு ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்குக் கை மாற்றப்பட்டது. சர்வதேச திரைப்பட விழாவில் பல விருதுகளை வாங்கியுள்ள இப்படம், இந்தியா சார்பாக ஆஸ்கர்விருது இறுதி போட்டி வரை சென்று பின்பு வெளியியேறியதுகுறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புதுச்சேரிஅரசின் சார்பில் சிறந்த திரைப்படமாக கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி படத்தின் இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)