shankar

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்விக்ரம், சதா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான படம் ‘அந்நியன்’. படம் வெளியானபோது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்று, நடிகர் விக்ரமிற்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக்கொடுத்தது. இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

ஷங்கர் கடைசியாக இயக்கி வந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, கரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளது. ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ஷங்கர் படம் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. தற்போது இப்படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Advertisment

இந்த நிலையில், ராம் சரண் படத்திற்குப் பிறகு ‘அந்நியன்’ படத்தின் ரீமேக்கை ஷங்கர் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரன்வீர்சிங் கதாநாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை 2022ஆம் ஆண்டு தொடங்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.