bfbnfsnbdsf

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டது. பின்னர் சென்னை திரும்பிய படக்குழு, நீண்ட ஓய்வுக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பைத் தொடங்கியது. சென்னை படப்பிடிப்பை நிறைவு செய்த ‘அண்ணாத்த’ படக்குழு, மீண்டும் ஹைதராபாத் விரைந்தது. ஹைதராபாத் படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

Advertisment

அப்படப்பிடிப்பை நிறைவுசெய்த ரஜினிகாந்த், தன்னுடைய மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வந்தார். இதையடுத்து, 'அண்ணாத்த' படத்தில் இன்னும் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய சில காட்சிகள் பாக்கி இருந்ததால், அதற்கான படப்பிடிப்பை சென்னையில் அரங்குகள் அமைத்துப் படமாக்கினர். அதோடு ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டன. இதையடுத்து பிற நடிகர்கள் நடிக்க வேண்டிய காட்சிகளைக் கொல்கத்தாவிலும்லக்னோவிலும் படக்குழுவினர் படமாக்கிவரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புவரும் ஆகஸ்ட் 27ஆம் தேதியோடு முடிவடைவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இப்படத்துக்கு ரஜினிகாந்த் சமீபத்தில் டப்பிங் பேசி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment