/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-6_17.jpg)
இரு கைகள் இல்லாமல் நீச்சல் போட்டியில் பல சாதனை படைத்துள்ளவர் கே.எஸ். விஸ்வாஸ். இவரின் வாழ்க்கையை மையமாக வைத்து கன்னட இயக்குநர் ராஜ்குமார் இயக்கியுள்ள படம் 'அரபி'. இப்படத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் தற்போதைய தமிழக பா.ஜ.க தலைவருமான அண்ணாமலை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த மாதமே வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் 'அரபி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கே.எஸ். விஸ்வாஸ், அண்ணாமலை இவர்களோடு சைத்ரா ராவ், பேபி அதிதி ராம் உள்ளிட்ட பலர் முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சேத்தன் சி எஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கம்பட ரங்கா இசையமைத்துள்ளார். அண்ணாமலை, இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)