sv sekar complaint

நடிகர் எஸ்.வி சேகர், சினிமாவைத்தாண்டி அரசியலிலும் நீண்ட காலமாக பயணித்து வருகிறார். கடந்த 2006ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் வென்று எம்.எல்.ஏ வாக இருந்தவர். பின்பு காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். இப்போது பாஜக வில் இருக்கிறார்.அரசியல் ரீதியாக அவர் கூறியுள்ளபல கருத்துக்கள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

Advertisment

அண்மைக் காலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பல கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக முன்வைத்து வருகிறார்.இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகபட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் வெளிநாட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அண்ணாமலை குறித்து தொடர்ந்து எதிர் கருத்து வெளியிட்டு வருவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார். இப்புகார் குறித்துபட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment