Ghost Party

நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அனபெல் சேதுபதி'. இப்படத்தில் யோகிபாபு மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படமானது, ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது. இப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

Advertisment

கடந்த 30ஆம் தேதி வெளியான இப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கிருஷ்ணா கிஷோர் இசையமைப்பில் 'ஆவி பறக்குது பாரு...' என்று தொடங்கும் கோஸ்ட் பார்ட்டி பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுவருகிறது.

Advertisment