டிசம்பர் 15-ல் அண்ணாத்த படப்பிடிப்பு துவக்கம்?

rajini

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. படத்தின் பாதி பணிகள் நிறைவடைந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக பணிகள் தடைபட்டன.

நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்னால் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார். தமிழகத்திற்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டதால், அண்ணாத்த படத்தினை முடித்துவிட்டு அவர் அரசியலில் முழுக்கவனம் செலுத்த இருக்கிறார். இதனைக்கருத்தில் கொண்டு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பானது டிசம்பர் 15-ம் தேதி தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி அண்ணாத்த படத்திற்கானதன்னுடைய பணிகளை 60 சதவிகிதம் நிறைவு செய்துள்ளார். எனவே பிற நடிகர், நடிகைகள் சம்பத்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்கிவிட்டு, ரஜினி தொடர்பான காட்சிகளை ஜனவரியில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe