/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/61_30.jpg)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். கரோனா பரவல், ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் தடைப்பட்ட நிலையிலும், இயக்குநர் சிவாவின் துல்லியமான திட்டமிடல் காரணமாகத் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, படத்தின் மொத்த பணிகளையும் நிறைவுசெய்துள்ளது. இப்படம் வரும் தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், அண்ணாத்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி சண்டைக்காட்சி, பஞ்ச் டயலாக், தங்கச்சி செண்டிமெண்ட் நிறைந்த இந்த ட்ரைலர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)