Advertisment

உயர் நீதிமன்ற தடையை மீறி வெளியான 'அண்ணாத்த'... அதிர்ச்சியில் படக்குழு !

annaatthe movie released on the internet

இயக்குநர்சிவா இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தில் நடித்துள்ளார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று (4.11.2021) 'அண்ணாத்த' படம் திரையரங்குகளில்வெளியானது. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைபெற்றுவருகிறது.

Advertisment

இந்நிலையில், 'அண்ணாத்த' திரைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்த படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடக் கூடாது என மனு தொடுத்திருந்தது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்படத்தை சட்டவிரோதமாகஇணையத்தில் வெளியிட தடை விதித்திருந்த நிலையில், தற்போது அதை மீறி 'அண்ணாத்த' படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisment

chennai high court ACTOR RAJINI KANTH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe