Advertisment

விடாமல் கேட்ட ரஜினி ரசிகர்கள்... டபுள் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

Annaatthe

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். கரோனா பரவல், ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் தடைப்பட்ட நிலையிலும், இயக்குநர் சிவாவின் துல்லியமான திட்டமிடல் காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் தீவிர கவனம் செலுத்திவருகிறது. இப்படத்தை தீபாவளி தினமான நவம்பர் 4ஆம் தேதி திரைக்கு கொண்டுவரும் முடிவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளது.

Advertisment

இந்த நிலையில், நாளைய தினம் (10.09.2021) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படவுள்ளது. அதனை முன்னிட்டு பல படங்களுக்கான அப்டேட்ஸ்கள் சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களின் தரப்பிலிருந்து வெளியாகிவந்த நிலையில், ‘அண்ணாத்த’ படம் தொடர்பாக ஏதாவது அப்டேட் வெளியாகும் என்று ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தரப்பிலிருந்து எந்த அப்டேட்ஸும் நேற்று மாலைவரை வெளியாகாத நிலையில், சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் அப்டேட் கேட்க ஆரம்பித்தனர். இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் இன்று காலைவரை ட்ரெண்டாகிவந்தன. இந்த நிலையில், ‘அண்ணாத்த’ படம் தொடர்பாக இரண்டு அப்டேட்டுகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காளைக்கு 11 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரும் வெளியாகவுள்ளது.

Advertisment

ACTOR RAJINI KANTH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe