/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/110_9.jpg)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகிவருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். கரோனா பரவல், ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் தடைப்பட்ட நிலையிலும், இயக்குநர் சிவாவின் துல்லியமான திட்டமிடல் காரணமாகத் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.
‘அண்ணாத்த’ படத்தை தீபாவளி தினத்தன்று திரைக்கு கொண்டுவரும் திட்டத்தில் உள்ள படக்குழு, சமீபத்தில் படத்தின் டீசரை வெளியிட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த டீசர், தற்போதுவரை 60 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த நிலையில், படத்தின் சென்சார் அப்டேட் குறித்த அறிவிப்பை படக்குழு இன்று (16.10.2021) வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை தணிக்கைத் துறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)