சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க,இயக்குனர் சிவாஇயக்கி வரும் படம் 'அண்ணாத்த'. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இருக்கும் நிலைமை சீரானவுடன் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கி, வரும் தீபாவளிக்கு 'அண்ணாத்த' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுருந்த நிலையில் கரோனா அச்சுறுத்தல் தொடர்வதால் 'அண்ணாத்த' படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
'அண்ணாத்த' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! அதிகாரபூர்வ அறிவிப்பு!
Advertisment