Skip to main content

பிக்பாஸில் களமிறங்கும் அஞ்சலி, யோகிபாபு!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி சுவாரசியமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில வாரத்தில் அந்நிகழ்ச்சி நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில் தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு பிக்பாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. யோகி பாபு, அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. அந்த படத்திற்கு தான் பிக் பாஸ் என்று தலைப்பு வைத்துள்ளனர். மற்றபடி யோகி பாபுவும், அஞ்சலியும் பிக் பாஸ் 3 வீட்டிற்கு எல்லாம் செல்லவில்லை.



படத்தின் தலைப்பு குறித்து தயாரிப்பாளர் சினிஷ் கூறியதாவது, "எங்கள் படத்திற்கு பிக் பாஸ் என்று தலைப்பு வைத்துள்ளோம். விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக எங்களுடையது ஆக்கிவிடுவோம். இது ஒரு ஃபேன்டஸி காமெடி படம். இந்த படத்தில் யோகி பாபு, அஞ்சலி தவிர்த்து ராமர், சுப்பு பஞ்சு, நிரோஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மாவும் நடிக்கிறார். ஸ்க்ரிப்ட்டை கேட்டபோது எனக்கு பிடித்திருந்தது. இது ரசிகர்களை நிச்சயம் கவரும். பிக் பாஸ் படத்தில் அஞ்சலி யோகி பாபுவின் காதலியாக வருகிறார் என்பதை தவிர வேறு எந்த தகவலையும் தற்போதைக்கு வெளியிட முடியாது" என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்