புது அவதாரம் எடுக்கும் அஞ்சலி

anjali takes new avatar

தமிழ் சினிமாவில் இயக்குநர் ராமின் 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி. பின்பு 'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளில் நடித்து வருகிறார். இதனிடையே 'வக்கீல் சாப்' படத்தை தொடர்ந்து 'பைரகி' படம், இயக்குநர் திரு இயக்கும் 'ஜான்சி' வெப் தொடர் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் ராம சரண்நடிப்பில் உருவாகி வரும் 'ஆர்சி 15' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அஞ்சலி ஒரு படத்தில் வில்லியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கும் அடுத்த படத்தில் அஞ்சலி வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அஞ்சலியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Anjali
இதையும் படியுங்கள்
Subscribe