Skip to main content

வெப் தொடரில் நடிக்கும் அஞ்சலி

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

anjali starring jhansi webseries

 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. இதனிடையே நடிகை அஞ்சலி இயக்குநர் திரு இயக்கும் ஜான்சி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இயக்குநர் திரு இயக்கத்தில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்கள் ரசிகரகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தை தொடர்ந்து அஞ்சலி நடிக்கும் ஜான்சி வெப் தொடரை இயக்கியுள்ளார். முமைத் கான், கல்யாண் மாஸ்டர், ராஜ் அர்ஜுன், சரண்யா, சம்யுக்தா ஹோமத் உள்ளிட்ட பலரும் இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

இந்நிலையில் ஜான்சி வெப் தொடர் பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டைமென்ட் சார்பில் நடிகர் கிருஷ்ணா இந்த வெப் தொடரை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது சீரியஸ் படம் அல்ல, பக்காவான கமர்சியல்” - ராம்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
director ram about his Yezhu Kadal Yezhu Malai movie

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்திப்ன் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிட தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிற 53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில், கடந்த 30ஆம் தேதி 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட்டது. 

இதற்காக நெதர்லாந்து சென்றுள்ள படக்குழு, விழாவில் பங்கேற்றது. படம் திரையிட்ட பிறகு அது குறித்த அனுபவம் பகிர்ந்த சூரி, “இங்க உள்ள மக்கள் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறாங்க. இந்த மாதிரி விழாவில் கலந்துகிட்ட பிறகு தான், நம்ம தமிழ் படத்துக்கு எவ்ளவு மரியாதை இருக்கு-ன்னு தெரியுது. கண்டிப்பா இந்தப் படம் உலகளவில் நல்ல பேரை வாங்கும்” என்றார்.    

பின்பு பேசிய ராம், “படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. விழாக்களில் திரையிடுவதால் ரொம்ப சீரியஸ் படம்னு நினைச்சிடாதீங்க. உண்மையாகவே பக்காவான கமர்சியல் படம். கோடைகாலத்தில் இப்படம் திரையரங்கில் வெளியாகும்” என்றார். 

Next Story

ரசிகர்களிடம் வரவேற்பை பெரும் அஞ்சலியின் வெப் சீரிஸ்

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

anjali starring fall web series get good response from audience

 

தமிழ்த் திரையுலகில் படங்களைத் தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. இதனால் பல முன்னணி பிரபலங்கள் இணையத் தொடர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அஞ்சலி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் சீரிஸ் 'ஃபால்'. 

 

இத்தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரை இயக்குநர் சித்தார்த் ராமசாமி இயக்கியது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவும் செய்துள்ளார். இந்த தொடர் 'வெர்டிஜ்' எனும் கனடிய வெப் தொடரின் அதிகாரப்பூர்வ தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் உருவாக்கப்பட்ட இந்த தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் வெளியாகியுள்ளது நினைவுகூரத்தக்கது.