ரசிகர்களிடம் வரவேற்பை பெரும் அஞ்சலியின் வெப் சீரிஸ்

anjali starring fall web series get good response from audience

தமிழ்த் திரையுலகில் படங்களைத் தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. இதனால் பல முன்னணி பிரபலங்கள் இணையத் தொடர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் அஞ்சலி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் சீரிஸ் 'ஃபால்'.

இத்தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரை இயக்குநர் சித்தார்த் ராமசாமி இயக்கியது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவும் செய்துள்ளார். இந்த தொடர் 'வெர்டிஜ்' எனும் கனடிய வெப் தொடரின் அதிகாரப்பூர்வ தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் உருவாக்கப்பட்ட இந்த தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் வெளியாகியுள்ளது நினைவுகூரத்தக்கது.

Anjali
இதையும் படியுங்கள்
Subscribe