Advertisment

ஷங்கர் படத்தில் கதாநாயகியாகும் அஞ்சலி?

Anjali

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், சமீபத்தில் இயக்கிவந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளது. இப்படம் மீண்டும் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், இயக்குநர் ஷங்கரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்கவுள்ளார் ஷங்கர். இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். தமன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பிற்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இப்படத்தில் நடிகர் ராம்சரண் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மற்றொரு கதாநாயகியாக நடிகை அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளது.

director Shankar Anjali
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe