Skip to main content

அடுத்தடுத்த படங்களில் அதிரடியாக கமிட் ஆகும் அஞ்சலி 

Published on 22/05/2018 | Edited on 23/05/2018
irumbu thirai.jpeg

 

 

anjali


இரண்டாவது ரவுண்டில் வெற்றிகரமாக வந்துகொண்டிருக்கும் நடிகை அஞ்சலி நடித்து சமீபத்தில் வெளியான 'காளி' படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அடுத்தாக இவர் நடிப்பில் 'பேரன்பு' படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து அவர் தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் 'நாடோடிகள் 2' படத்தில் நடித்துகொண்டிருக்கிறார். இந்த படமும் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்ததாக அஞ்சலி விஜய் சேதுபதியுடன் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், அஞ்சலியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை அஞ்சலி அடுத்ததாக 'லிசா' என்ற திகில் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக உருவாகும் இந்த படத்தை ராஜூ விஸ்வநாத் இயக்குகிறார். பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் 'மதுரவீரன்' பட இயக்குனர் பி.ஜி.முத்தையா தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருபதாக தகவல் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

அதைக் கொஞ்சம் மாத்திக்கலாமே விஜய் ஆண்டனி!

Published on 21/05/2018 | Edited on 22/05/2018

காளி - விமர்சனம்  

 

vijay antony kaali



அமெரிக்காவில் மருத்துவராக இருக்கும் விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு அம்மா, மகன், ஒரு மாடு முட்டுவது, ஒரு பாம்பு சீறுவது போன்று கனவுகள் வருகிறது. இந்த கனவு ஏன் அடிக்கடி வருகிறது என்று குழப்பத்தில் இருக்கும் விஜய் ஆண்டனியின் தாயருக்கு கிட்னி செயலிழந்து விடுகிறது. பின்னர் தன் அம்மாவைக் காப்பாற்ற தனது கிட்னி ஒன்றை கொடுக்கப்போவதாக முடிவெடுத்த விஜய் ஆண்டனிக்கு இவர் தன் அம்மா இல்லை என்றும் அவருக்கு தன் கிட்னியை கொடுக்கமுடியாது என்ற உண்மை தன் வளர்ப்பு தந்தை மூலம் தெரியவருகிறது. இதனால் தனக்கு அடிக்கடி வரும் கனவுக்கும், தன் பெற்ற தாய்க்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று எண்ணி தன் அம்மாவை கண்டுபிடிக்க விஜய் ஆண்டனி இந்தியா செல்கிறார். இந்தியா வந்த விஜய் ஆண்டனி தனது அம்மா இறந்துவிட்டதை தெரிந்து கொள்கிறார். பின்னர் தனது தந்தை யார் என்பதை யோகிபாபு உதவியுடன் தேடிச் செல்கிறார். விஜய் ஆண்டனி, தன் தந்தையைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் 'காளி'.  

 

 


இவர்கள் அப்பாவை தேடிச் சென்ற கிராமத்தில் உள்ள ஊர்த் தலைவரான மதுசூதனன், திருடனான நாசர், ஆகிய இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு இவர்களின் கதையை கேட்கிறார். முடிவில் விஜய் ஆண்டனியின் அப்பா யார்..? விஜய் ஆண்டனியின் அம்மா யார்...? விஜய் ஆண்டனியின் கனவுக்கு விடை கிடைத்ததா...? என்பதே படத்தின் மீதி கதை.

 

 

 

vijay yogi kaali



இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு நான்கு கெட்டப்புகள். ஆனால் நான்கு கெட்டப்புகளிலும் நமக்கு விஜய் ஆண்டனிதான் தெரிகிறார். அமைதியான பேச்சு, தீர்க்கமான பார்வை, எதற்கும் அதிர்ந்து வெடிக்காத தன்மை எல்லாம் நான், சலீம், பிச்சைக்காரன் வரைக்கும் ஓகே. அடுத்தடுத்து அதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாமே விஜய் ஆண்டனி?  சித்த மருத்துவராக வரும் அஞ்சலி கொடுத்த வேலையை அவரது பாணியில் ரசிக்கும்படி செய்திருக்கிறார். ஆனாலும், அங்காடித் தெரு அஞ்சலிக்கு இது குறைவுதான். இன்னொரு நாயகியாக வரும் சுனைனா சிறிது நேரம் வந்தாலும் மனதில் பதிகிறார். இன்னொரு நாயகி அம்ரிதா கொடுத்த கதாபாத்திரத்தை செய்துள்ளார். மற்றுமொரு நாயகியாக வரும் ஷில்பா மஞ்சுநாத் முகபாவனைகள் மட்டுமல்லாமல் தன் உடல் உழைப்பையும் கொடுத்து நன்றாகவே நடித்துள்ளார். அச்சு அசலான துடுக்கான கிராமத்து பெண்ணாகவே மாறி ரசிக்க வைத்துள்ளார். இவர் வரும் பாடல் காட்சி அருமை.  யோகி பாபு காமெடி காட்சிகளில் அவ்வப்போது கிச்சுக்கிச்சு  மூட்டுகிறார். மற்றபடி நாசர், மதுசூதனன், வேல ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் எப்போதும் போல் அவரவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். 

 

 


ஒரு கனவில் ஆரம்பிக்கும் படம் ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை உருவாக்கி பின்னர் ஏற்கனவே பார்த்துப் பழகிப்போன காட்சிகளால் நகர்த்தியுள்ளார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. அப்பாவாக நினைத்து ஒவ்வொருவரிடமும் கேட்கும் ஃப்ளாஷ்பேக்கிலும் நாசர், மதுசூதனன், ஜெயபிரகாஷ் என அவர்களது இளமை தோற்றத்தில் விஜய் ஆண்டனியே வரும் புதிய யுக்தியை கடைபிடித்து ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் கிருத்திகா. ஆனால், அத்தனையிலும் விஜய் ஆண்டனிதான் தெரிகிறார். படத்தில் நான்கு கெட்டப்புகளில் வரும் விஜய் ஆண்டனிக்கு நான்கு கதாநாயகிகள் என படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய கிருத்திகா, அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி தன் முதல் படமான 'வணக்கம் சென்னை' படத்தைக் காட்டிலும் இப்படத்தின் கதையில் நன்றாக முதிர்ச்சி காட்டியுள்ளார். சாதி வேறுபாடுகளை சித்தரித்திருக்கிறார்கள், ஆனால் அழுத்தமே இல்லாமல்.  

 


 

 

anjali kaali



விஜய் ஆண்டனியின் இசையில் 'அரும்பே' பாடல் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் இனிமை. பின்னணி இசையும் கடந்த சில படங்களை விட சிறப்பாக இருக்கிறது. ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு காலகட்டம், இடம் ஆகிய வித்தியாசங்களை  நன்றாகப் பிரித்துக் காட்டியுள்ளது. படம் வெற்றியோ தோல்வியோ, விஜய் ஆண்டனிக்கு கதைத்  தேர்வில் ஒரு நல்ல பெயர் இருந்தது. வித்தியாசமாக இருக்கும், தனக்கேற்ற பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பார், தேவையில்லாத  ஆர்ப்பாட்டங்கள் இருக்காது ஆகிய நல்ல விஷயங்கள், எமன், அண்ணாமலை, காளி என கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.    

'காளி' - விஜய் ஆண்டனி சற்று நிதானித்து யோசிக்க வேண்டிய நேரத்தைக் குறிக்கிறது. 






 

Next Story

வருகிறது காளி.... நீங்கியது தடை... மகிழ்ச்சியில் விஜய் ஆண்டனி 

Published on 11/04/2018 | Edited on 12/04/2018
vijay antony


அண்ணாதுரை படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அடுத்ததாக நடித்துள்ள படம் 'காளி'. நடிகை அஞ்சலி நாயகியாக நடிக்கும் இப்படத்தை 'வணக்கம் சென்னை' பட இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 13-ந்தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தை வெளியிட தடைகேட்டு சென்னை ஐகோர்ட்டில் வில்லியம் அலெக்சாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இந்த வழக்கை குறித்து அவர் பேசுகையில்...."விஜய் ஆண்டனி நடித்த அண்ணாத்துரை படத்தை வாங்கி வெளியிட்டதில் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, ‘காளி’ படத்தை குறைந்த விலைக்கு எனக்கு தருவதாக விஜய் ஆண்டனியும், ‘காளி’ படத்தை தயாரிக்கும் அவரது மனைவி பாத்திமாவும் உத்தரவாதம் அளித்தனர். நானும் ரூ.50 லட்சம் முன்தொகை கொடுத்து, அவர்களுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டேன். தற்போது திரையுலக வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனால், புதிய படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால், என்னால் பாக்கித் தொகையை கொடுக்க முடியவில்லை.இதைடுத்து ‘காளி’ படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக விஜய் ஆண்டனி எனக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார். எனவே, ‘காளி’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்றார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘காளி’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன். அதேநேரம், எதிர் மனுதாரர்கள் பாத்திமா, விஜய் ஆண்டனி ஆகியோர் ரூ.4.75 கோடியை வரும் 11ஆம் தேதிக்குள் ஐகோர்ட்டில் டெபாசிட் செய்தால், திட்ட மிட்டதேதியில் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து விஜய் ஆண்டனி அப்பீல் செய்தார். இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் சுப்பையா, ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் ரூ.2 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும்  'காளி' படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியும் உத்தரவிட்டனர். இதனால் காளி படத்துக்கு ஏற்பட்ட தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.