Anjaam Pathiraa

இந்த வருடத்தின் தொடக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'அஞ்சாம் பாதிரா'. மிது மானுவல் தாமஸ் இயக்கிய இப்படத்திற்கு தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

முதல் பாகத்தை இயக்கிய மிது மானுவல் தாமஸே இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு 'ஆறாம் பாதிரா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வருடமே திரைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது விரைவில் தொடங்க உள்ளது.