Anitha Sampath Interview 

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னதிரை நிகழ்ச்சிகளின் வழியே இப்போது சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கும் அனிதா சம்பத்தை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது அவரது இந்த நீண்ட பயண அனுபவம் குறித்த கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.

Advertisment

அனிதா சம்பத் பேசியதாவது, “எனக்கென்று இலக்கே இருந்ததில்லை. ஒரு இலக்கு இருந்தது. அதுசெய்தி வாசிப்பாளராக இருக்க வேண்டும் என்பது தான். அது கிடைத்ததும் அதிலிருந்து கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையுமே நான் பயன்படுத்திக் கொண்டேன். நகைக்கடை விளம்பரம் முதல் பெரிய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது வரை அடுத்தடுத்து அதுவாகவே என்னை அழைத்துக் கொண்டு போகிறது. கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் என்னுடைய பெஸ்டை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய பாலிசி. அது தான் என் பயணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

Advertisment

எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதில் என்னுடைய கடின உழைப்பை செலுத்தி என்னை நிரூபிக்க முயற்சி செய்வேன். அந்த வகையில் தான் தெய்வ மச்சான் திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்துள்ளேன். அதை காமெடியாக காட்டியிருக்கிறார்கள். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கண்டுகளிக்கும் வகையில் ஒரு சிறப்பான படமாக திரையரங்கில் வர உள்ளது.” என்றார்.