anitha sampath

ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகியவர் அனிதா சம்பத். இவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். சமீபத்தில் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Advertisment

இந்த நிலையில், அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி.சம்பத் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். இவர், தனது மகனுடன் இணைந்து சீரடி சென்றுள்ளார். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் ரயிலிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திலேயே மரணமடைந்த அவரது உடல், பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை கொண்டு வரப்படுகிறது. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத்தின் திடீர் மரணம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இவ்வருட புத்தாண்டை தனது குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாட இருப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா சம்பத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.