aniruth and samantha comments on eternals movie

கற்பனை கதாபாத்திரங்களானசூப்பர் ஹீரோக்களை மையமாக கொண்டு எடுக்கப்படும்மார்வெல் திரைப்படங்களுக்கென்றே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படிப்பட்ட ரசிகர்களைமகிழ்விக்கும் வகையில் பல புதிய படங்களையும் சீரிஸ்களையும் அடுத்தடுத்து உருவாக்கிவருகிறது மார்வெல். அந்த வரிசையில் தற்போது 'எடர்னல்ஸ்' படத்தை தயாரித்துள்ளது. மார்வெல் காமிக்ஸ் நாவலைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மார்வெல்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 26வது படமாக உருவாகியுள்ள 'எடர்னல்ஸ்' படத்தை க்ளோய்ஷாவ் இயக்கியுள்ளார். இதில் கெம்மா சான், ரிச்சர்ட் மேடன், பிரைன் டைரி ஹென்றி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், 'எடர்னல்ஸ்' திரைப்படம் இந்தியா முழுவதும்நவம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தைப் பார்ப்பதற்கு திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

Advertisment

இதனிடையே, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை சமந்தா இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் 'எடர்னல்ஸ்' படம் குறித்ததங்களின் ஆவலை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் அனிருத் தனது சமூகவலைதளபக்கத்தில், "எடர்னல்ஸ் ஒரு இந்திய திரைப்படம்தான். இது அவெஞ்சர்ஸால்முடியாத ஒன்றை செய்யும்" என்று கூறியுள்ளார். தற்போது இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.