Advertisment

தனுசு ராசிக்காரருக்காக பாட்டு பாடிய அனிருத்!

ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் “தனுசு ராசி நேயர்களே”. ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவம்சி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இவர் இசையில் உருவாகியுள்ள ஒரு இளமை துள்ளும் பெப்பி மெலடி பாடல் ஒன்றை அனிருத் பாடியுள்ளார். மேலும் இதுகுறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது...

Advertisment

anirudh

''கொண்டாட்டம், குத்துப்பாடல், காதல் பாடல், சோகப்பாடல் என எந்த ஒரு சூழலை எடுத்துக்கொண்டாலும் அனிருத் அங்கே பொருந்தக்கூடிய திடகாத்திர குரல் கொண்டவராக இருக்கிறார். அவர் தன் குரலால் பாடல் வரிகளில் மாயாஜாலம் நிகழ்த்தி பாடலை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுவிடுகிறார். அவருடைய அத்தனை ஆல்பத்திலும் அவர் பாடிய பாடல்களிலும் தனித்தன்மையை கண்டிருக்கிறேன். எனது சிக்சர் படத்தில் அவர் பாடிய பாடலுக்கு பிறகு மீண்டும் எனது ஸ்டூடியோவில் அவர் குரலை பாடல் பதிவு செய்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இப்பாடல் கதையின் முன்னணி பாத்திரம் தன் வாழ்வின் சரியான துணையை தேடி பாடும் பாடலாக படத்தில் வருகிறது.

கு. கார்த்திக் மிக எளிமையாகவும் அதே நேரம் எளிதில் ரசிகர்களை ஈர்க்கும் வரிகளில் பாடலை எழுதியுள்ளார். இப்பாடல் உருவாகிய மொத்த தருணமும் கொண்டாட்டமானதாக இருந்தது. ரசிகர்களும் பாடலை அதே போல் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்'' என்றார். ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில், அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாகவும், குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாகவும் இப்படம் உருவாகி வருகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மிக விரைவில் இசை மற்றும் டிரெயலர் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

anirudh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe