Skip to main content

தனுசு ராசிக்காரருக்காக பாட்டு பாடிய அனிருத்!

Published on 31/10/2019 | Edited on 31/10/2019

ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் “தனுசு ராசி நேயர்களே”. ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவம்சி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இவர் இசையில் உருவாகியுள்ள ஒரு இளமை துள்ளும் பெப்பி மெலடி பாடல் ஒன்றை அனிருத் பாடியுள்ளார். மேலும் இதுகுறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது...

 

anirudh

 

''கொண்டாட்டம், குத்துப்பாடல், காதல் பாடல், சோகப்பாடல் என எந்த ஒரு சூழலை எடுத்துக்கொண்டாலும் அனிருத் அங்கே பொருந்தக்கூடிய திடகாத்திர குரல் கொண்டவராக இருக்கிறார். அவர் தன் குரலால் பாடல் வரிகளில் மாயாஜாலம் நிகழ்த்தி பாடலை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுவிடுகிறார். அவருடைய அத்தனை ஆல்பத்திலும் அவர் பாடிய பாடல்களிலும் தனித்தன்மையை கண்டிருக்கிறேன். எனது சிக்சர் படத்தில் அவர் பாடிய பாடலுக்கு பிறகு மீண்டும் எனது ஸ்டூடியோவில் அவர் குரலை பாடல் பதிவு செய்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். இப்பாடல் கதையின் முன்னணி பாத்திரம் தன் வாழ்வின் சரியான துணையை தேடி பாடும் பாடலாக படத்தில் வருகிறது.

 

 

கு. கார்த்திக் மிக எளிமையாகவும் அதே நேரம் எளிதில் ரசிகர்களை ஈர்க்கும் வரிகளில் பாடலை எழுதியுள்ளார். இப்பாடல் உருவாகிய மொத்த தருணமும் கொண்டாட்டமானதாக இருந்தது. ரசிகர்களும் பாடலை அதே போல் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்'' என்றார். ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில், அதனால் ஏற்படும் பிரச்சனையும் அதனை தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாகவும், குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாகவும் இப்படம் உருவாகி வருகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மிக விரைவில் இசை மற்றும் டிரெயலர் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனிருத் பாடிய ‘ஆவோ கில்லெல்’ பாடல்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Aao Killelle album song released

அனிருத் குரலில் பிரவின் மணி இசையில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘ஆவோ கில்லெல்'. பி ரெடி மியூசிக் இப்பாடலை வெளியிடுகிறது.  ஆவோ கில்லெல் என்பது ஒரு இசை கலைடோஸ்கோப் என்றும் இது தொற்று தாளங்கள், ஆத்மார்த்தமான குரல்கள் மற்றும் விளையாட்டுத்தனமான கூறுகளை இணைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் பீட்டர்ஸின் ரித்மிக் ராப், வைஷாலி ஸ்ரீ பிரதாப்பின் டல்செட் டோன்கள், நவின் பியின் பாடல் வரிகள் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. அனைத்து முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்பாடல் இருக்கிறது. 

Next Story

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதி பட நடிகை

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
sivakarthikeyan ar murugadoss movie update

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், தற்காலிகமாக 'எஸ்.கே 21' என அழைக்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17 ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அதை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகத் தெரிகிறது.

இப்படத்தை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திற்காக கை கோர்த்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாகவும் அதற்கான டெஸ்ட்  ஷூட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் வில்லனாகத் துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜாம்வால் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. 

இந்த நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளதாகப் பரவலாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. கன்னட படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர், தமிழில் விஜய் சேதுபதியின் 51வது படத்தில் நடிக்கிறார். இவரைத் தவிர்த்து இசையமைப்பாளராக அனிருத் சிவகார்த்திகேயன் படத்தில் பணியாற்றவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பட பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.