'துணிவு' படத்தில் இணைந்த அனிருத்

anirudh sing a song in ajith in thunivu

மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது.

மேலும்இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அஜித் தன் டப்பிங் பணியை முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். 'ஏகே 62' எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் குறித்த அப்டேட்தற்போது வெளியாகியுள்ளது.இப்படத்தில் அனிருத் 'சில்லா சில்லா' என்ற பாடலை பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அஜித் படத்திற்கு அனிருத் பாடியுள்ள 'ஆலுமா டோலுமா', 'சர்வைவா' உள்ளிட்ட பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில் இந்தப் பாடலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ACTOR AJITHKUMAR anirudh ghibran h.vinoth Thunivu
இதையும் படியுங்கள்
Subscribe