இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் தற்போது இந்திய அணியில் விளையாண்டு வரும் ருத்ராஜ் கெய்க்வாட், இவர்களோடு இசையமைப்பாளர் அனிருத் ‘பேடல்’ விளையாட்டு விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து ‘7பேடல்’ என்ற பெயரில் புதிய பேடல் பிராண்டை தொடங்கியுள்ளார். தோனியின் ஜெர்சி நம்பவர் 7 என்பது நினைவுகூரத்தக்கது. இதன் முதல் மையம் சென்னை கிழற்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 20,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மையத்தில், மூன்று பேடல் மைதானங்கள் அமைந்துள்ளன. மேலும் ஒரு பிக்கள் பால் மைதானம், ஒரு நீச்சல் குளம், ஒரு உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட சில அம்சங்களும் இடம் பெற்றுள்ளது. இதன் தொடக்க விழா கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது. இதில் தோனி, ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்பு தான் மூவரும் ‘பேடல்’ விளையாண்டு மகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இந்த நிலையில் ‘7பேடல்’ நிறுவனம், மூவரும் விளையாடிய பேடல் விளையாட்டு வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளது. முதலில் தோனியும் அனிருத்தும் பேடல் விளையாட, இதில் அனிருத் களைப்பாகிவிடுகிறார். உடனே ருத்ராஜ் வந்து, உதவி வேண்டுமா என அனிருத்திடம் கேட்க, டபுள்ஸ் விசெஸ் சிங்களா என பதிலளிக்க, இருவரும் ஒரு அணியாக தோனியிடம் மோதுகின்றனர். பின்பு அனிருத், ருத்ராஜிடம், ‘தல-க்கு இன்னும் ஸ்டைலும் பவரும் அப்டியே இருக்குல்ல’ எனக் கேட்க ‘அது கூடவே பொறந்தது’ என ருத்ராஜ் பதிலளிக்கிறார். பின்பு கூலி பட பாடலில் ரஜினி பேசும் வசனமான‘இந்த ஆட்டம் போதுமா குழந்தை’ என பின்னணியில் ஒலிக்க தோனி காட்டப்படுகிறார். இந்த வீடியோவின் பின்னணியில் கூலி பட பாடலான ‘பவர்ஹவுஸ்’ பாடல் இடம்பெறுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Thala 🤝 Ani 🤝 Rutu
— 7Padel_India (@7Padel_India) August 8, 2025
That was our opening night at 7Padel! 🥳#7Padel#7PadelIndia@anirudhofficial@Ruutu1331@msdhonipic.twitter.com/raVwepnwxQ