தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடித்து இந்திய அளவில் பிரபலமானார். பெரும் எதிரிபார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் அடுத்தாகஇயக்குநர் கொரடலாசிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக என்.டி.ஆர் 30 எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகஇருக்கும் அனிருத் தெலுங்கில்ஏற்கனவே 'கேங் லீடர்', 'ஜெர்சி' ஆகிய படங்களுக்கு இசையமைத்து குறிப்பிடத்தக்கது.