/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/414_2.jpg)
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லைகர்' படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்துவருகிறது. பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'லைகர்' படத்தைத் தயாரிக்கிறது. இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா அடுத்ததாக இயக்குநர் சிவ நிர்வாணாஇயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இவர் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார்.இயக்கத்தில் வெளியான நின்னுக்கோரி, மஜிலி, டக் ஜெகதீஷ் ஆகிய படங்கள் ஹிட்டடித்ததைதொடர்ந்து தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்துள்ளார். இப்படம் வித்தியாசமான காதல் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகஇருக்கும் அனிருத் தெலுங்கில்ஏற்கனவே 'கேங் லீடர்', 'ஜெர்சி' ஆகிய படங்களுக்கு இசையமைத்து குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)