வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தாணு தயாரிக்கும் இப்படம் வட சென்னை பட உலகை மையப்படுத்தி உருவாகிறது. இப்படத்தின் அறிவிப்பு, புரொமோ மூலம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான படப்பிடிப்பு கடந்த ஜூலையில் சில தினங்கள் மட்டும் நடந்தது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக இயக்குநர் நெல்சனும் இடம்பெற்றிருந்தார். 

Advertisment

இந்த புரொமோவின் சிறு முன்னோட்டம் கடந்த மாதம் 4ஆம் தேதி வெற்றிமாறன் பிறந்தநாளையொட்டி வெளியாகியிருந்தது. இதில் சிம்பு முகம் இடம்பெறவில்லை. இருப்பினும் வட சென்னை படத்தில் வரும் அந்த காலத்து கெட்டப்பில் சிம்பு தோன்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து அறிவிப்பு புரொமோ தற்போது திரையரங்கில் இன்று பிரத்யேகமாக வெளியாகிறது. நாளை(17.10.2025) யூட்யூபில் வெளியாகவுள்ளது. தெலுங்கில் இப்படம் ‘சாம்ராஜ்யம்’ என்ற தலைப்பில் வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு புரோமோ இரண்டும் காலை 10.07 மணிக்கு வெளியாகிறது. இதில் தெலுங்கு புரோமோவை ஜூனிய என்.டி.ஆர் வெளியிடுகிறார். 

Advertisment

புரொமோ குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சிம்பு, “டைம் கிடைச்சா தியேட்டர்ல பாத்துடுங்க... ஒர்த்தா இருக்கு, அந்த அனுபவத்தை மிஸ் பன்னிடாதீங்க” என ஹைப் ஏற்றினார். இந்த நிலையில் படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சிம்பு ரத்தம் படித்த முகத்துடன் ஆக்ரோஷமாக தோன்றுகிறார். இதில் கூடுதல் அப்டேட்டாக அனிருத் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் ஏற்கனவே இசையமைப்பதாக தகவ உலா வந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இப்போது இப்போஸ்டர் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று அனிருத் பிறந்தநாள் என்பது நினைவுகூரத்தக்கது.

வழக்கமாக வெற்றிமாறன் ஜிவி பிரகாஷை புக் செய்வார். விடுதலை படங்களுக்கு மட்டும் இளையராஜா இசையமைத்திருந்தார். மேலும் வட சென்னை படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அரசன் படம் வட சென்னை பட உலகை மையப்படுத்தி எடுக்கப்படுவதால் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அனிருத் இசையமைத்துள்ளார். இதன் மூலம் வெற்றிமாறன் படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கிறார். அதே போல் சிம்பு படத்திற்கும் முதல் முறையாக இசையமைக்கிறார். இதற்கு முன்னதாக இருவரும் இணைந்து இசையமைத்த ‘பீப்’ பாடல் இணையத்தில் கசியப்பட்டு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இப்பாடல் இருப்பதாக பெரும் சர்ச்சை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. 

Advertisment