இசையமைப்பாளர் அனிருத் ‘ஹுக்கும்’ என்ற பெயரில் பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறார். அந்த வகையில் சென்னையில் வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று நடத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது. 

நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்கவுள்ளனர். இதனால் அங்கு ரசிகர்களின் பாதுகாப்பு, பார்க்கிங் போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை District எனும் பிரத்யேக ஆப்பில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தொடங்குகிறது. அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.‌