Advertisment

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அனிருத் கூட்டணி!

Anirudh has sung song directed  Aishwarya Rajinikanth

கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர்.இதனை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கையின் மூலம் தனித்தனியே வெளியிட்டனர். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

இதனைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளார். பே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளஇந்த இசை ஆல்பத்தைஐஸ்வர்யா இயக்கி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில் இந்த இசை ஆல்பம் குறித்த அப்டேட் வீடியோ ஒன்றைஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில்பகிர்ந்துள்ளார். அதில், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்பாடலை தமிழில் அனிருத், தெலுங்கில் சாகர், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த் ஆகியோர் பாடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தபாடல்விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

actor dhanush aishwarya anirudh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe