ரஜினி, தனது 50 ஆண்டுகால திரைபயணத்தை கொண்டாடும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘கூலி’ படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் டபுள் ட்ரீட்டாக கொண்டாடி வருகின்றனர். முதல் நாள் முதல் காட்சியை வரவேற்க வழக்கம் போல் ரசிகர்கள் தியேட்டர் வளாகத்திற்குள் குவிந்து, பட்டாசு, மேளதாளம், கேக் கட்டிங் என தியேட்டரை விழாக்கோலம் ஆக்கினர்.
ரசிகர்களுடன் திரைப் பிரபலங்கள் தனுஷ், லதா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், அனிருத், ஸ்ருதிஹாசன், பிரியங்கா மோகன், சௌபின் சாகிர் உள்ளிட்ட பலர் கண்டுகளித்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, முன்னணி நடிகர்களான நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், இவர்களுடன் சிறப்பு வேடத்தில் ஆமிர் கான் என நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதால் மற்ற மாநிலங்களிலும் படத்துக்கு மாஸ் ஓபனிங் இருந்தது.
இந்த நிலையில் முதல் காட்சி முடிந்து, திரை பிரபலங்கள் வெளியே வருகையில், அவர்களை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது லோகேஷ் கனகராஜ், ரசிகர்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். பின்பு அனிருத், “ரஜினியின் 50வது திரை பயணத்தில் இந்த படம் வெளியானது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்த படத்துல நானும் ஒரு பார்ட்டா இருந்தது ரொம்ப சந்தோஷம். இப்போ ரொம்ப எமோஷ்னலா இருக்கு. நான் முன்னாடி ஒரு மீம் பார்த்தேன். உண்மையைச் சொன்னால், இனிமே நான் ஆடிட்டே இருப்பேன்” என்றார்.