Published on 26/09/2022 | Edited on 26/09/2022

இயக்குநரும், இசையமைப்பாளருமான எஸ்.வி ரமணன் காலமானார். பழம்பெரும் இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் மகனும், இசையமைப்பாளர் அனிருத்தின் தாய்வழி தாத்தாவுமான எஸ்.வி ரமணன், உருவங்கள் மாறலாம், மான்யம், துரைபாபு, ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும், சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். சில ஆவணப்படங்கள் மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில தொடர்களையும் இயக்கியுள்ளாராம்.
இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று உயிரிழந்துள்ளார். அவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.