anirudh devaraa movie song issue

தமிழ், தெலுங்கு என பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். தமிழில் ரஜினியின் கூலி, கமலின் இந்தியன் 3, அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா, விஜய் தேவரக்கொண்டாவின் 12வது படம் என கைவசம் வைத்துள்ளார்.

இதில் ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படத்தில், இரண்டாவது பாடலான ‘சுட்டாமலே’ லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. இப்பாடலை ஷில்பா ராவ் பாடியிருக்க ராமஜோகய்யா சாஸ்திரி வரிகள் எழுதினார். மெலோடி பாடலாக அமைந்த இப்பாடல், பிரபல சிங்களப் பாடலான 'மணிகே மகே ஹிதே' பாடலின் சாயலாக இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். இதனால் சர்ச்சை உருவான நிலையில் தற்போது அந்த சிங்களப் பாடலுக்கு இசையமைத்த சமத் சங்கீத், தற்போது சர்ச்சை குறித்துப் பேசியுள்ளார்.

சமத் சங்கீத்தின் இன்ஸ்டாகிராம் பதிவில், “அனிருத்தின் பாடல்களை எப்போதும் ரசிப்பவன் நான். என்னுடைய பாடலான 'மணிகே மகே ஹிதே' பாடல், அவர் இசையமைக்கத் தூண்டுகோலாக அமைந்தது எனக்கு மகிழ்ச்சிதான்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதன் மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.