தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் படங்களை தவிர்த்து அடிக்கடி இசை நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார். சர்வதேச அளவில் இவரது இசை நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் வரும் 26ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் அமையப்பெற்றிருக்கும் திருவிடந்தை எனும் இடத்தில் ‘ஹுக்கும்’ எனும் தலைப்பில் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
இந்த நிலையில் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது. இந்திய அளவிலான இசையமைப்பாளர்கள் தலைமை ஏற்று நடத்தும் இசை நிகழ்ச்சி ஒன்றின் டிக்கெட் இவ்வளவு குறைவான நேரத்தில், அதிவேகமாக விற்பனையாகி புதிய சாதனை படைத்திருப்பது இதுதான் முதன்முறை என சொல்கிறார்கள்.