Advertisment

அரபு நாட்டில் ஒலித்த 'அரபிக் குத்து'... வைரலாகும் வீடியோ

Anirudh and jonita gandhi sings Arabic kuthu song DubaiExpo2020

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியாகும் என அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான 'பீஸ்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பல சாதனைகளை படைத்துள்ள இப்பாடல் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Advertisment

இந்நிலையில் துபாயில் நடந்துவரும் பிரபலமான 'துபாய் எஸ்போ 2020' நிகழ்ச்சியில் விஜய்யின் 'அரபிக் குத்து' பாடல் ஒலித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பல இசை கலைஞர்கள் கச்சேரி நடத்தி வருகின்றனர். அந்தவகையில் நேற்று(23.2.2022) நடந்த அனிருத்தின் இசை கச்சேரியில் 'அரபிக் குத்து' பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். அப்போது அனிருத்தின் தந்தை இப்பாடலுக்கு நடனமாடியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

இதனை தொடர்ந்து 'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் மார்ச் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு இசைஞானி இளையராஜாவின் கச்சேரியும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

actor vijay arabic kuthu Beast dubai expo 2020
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe